செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் நடாலுக்கு அதிர்ச்சியளித்த தீம்

DIN


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் ரஃபேல் நடாலை வீழ்த்திய டொமினிக் தீம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடாலும், ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த டொமினிக் தீம்மும் விளையாடினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை தீம் 7-6 என கைப்பற்றினார். இது 67 நிமிடங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் பெரிய மாற்றம் இல்லை. பரபரப்பாக நடைபெற்ற இந்த செட்டையும் 79 நிமிடங்களில் தீம் 7-6 என கைப்பற்றினார்.

இதையடுத்து, எழுச்சி கண்ட ரஃபேல் நடால் மூன்றாவது செட்டை 6-4 என வென்றார். இருந்தபோதிலும், நான்காவது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய தீம் அதை 7-6 என கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம்,  7-6, 7-6, 4-6, 7-6 என்கிற செட் கணக்கில் டொமினிக் தீம் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றதன்மூலம் டொமினிக் தீம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில், ஜெர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் மற்றும் சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டான் வாவ்ரின்கா ஆகியோர் விளையாடினர். இதில், ஸ்வெரெவ் 1-6, 6-3, 6-4, 6-2 என்கிற செட் கணக்கில் வாவ்ரின்காவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இவர் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT