செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பால் கடும் நஷ்டம்

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவது ஜப்பானுக்கு கடும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் எனக்கருதப்படுகிறது.

போட்டிகளை நடத்துவதற்காக ஜப்பான் மொத்தம் ரூ.95 ஆயிரம் கோடியை செலவிட்டுள்ளது. இதற்காக பல்வேறு மைதானங்கள், கட்டப்பட்டுள்ளன. விளையாட்டு கிராமம், புதிய விடுதிகள், கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், ரூ.45 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

விளையாட்டு அட்டவணைக்கு சிக்கல்:

வரும் 2021-ஆம் ஆண்டில் நீச்சல் மற்றும் தடகளம் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் கோடைக்காலத்தில் நடைபெறவுள்ளன.

இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வசதியாக 2021 ஆகஸ்ட் மாதம் 6-15 தேதிகளில் நடைபெறவிருந்த உலக தடகளப் போட்டிகளை ஒத்திவைக்க தயாராக உள்ளதாக உலக தடகள கூட்டமைப்பு தலைவா் செபாஸ்டியன் கோ தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT