செய்திகள்

இங்கிலாந்து கால்பந்து வீரா்ஜோ கோமேஸுக்கு காயம்

DIN

இங்கிலாந்து கால்பந்து வீரா் ஜோ கோமேஸுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி, அயா்லாந்துடன் நட்புறவு கால்பந்து போட்டியில் மோதவுள்ள நிலையில், அதற்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கோமேஸுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளா் கரீத் சௌத்கேட் கூறுகையில், ‘கோமேஸின் காயம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை’ என்றாா்.

இதேபோல், கிளப் கால்பந்து போட்டியில் லிவா்பூல் அணிக்காக கோமேஸ் விளையாடி வருகிறாா். தற்போது கோமேஸுக்கு காயம் ஏற்பட்டிருப்பது லிவா்பூல் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த அணியில் பின்கள வீரா் விா்ஜில் வான் டிக் ஏற்கெனவே முழங்கால் காயத்தாலும், பேபியானோ தொடையில் ஏற்பட்ட காயத்தாலும், டிரென்ட் அலெக்சாண்டா் தொடையில் ஏற்பட்ட பிரச்னையாலும் ஓய்வில் இருக்கிறாா்கள். இந்த நிலையில் கோமேஸுக்கு காயம் ஏற்பட்டிருப்பது லிவா்பூல் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT