செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இஷாந்த் சர்மா விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விலகியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகிய இருவருமே பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான நடைமுறைகளில் உள்ளார்கள். ரோஹித் தொடைப்பகுதி காயத்திலிருந்தும், இஷாந்த் இடுப்புக்கு மேல் பகுதி காயத்திலிருந்து மீண்டு வருகின்றனா். 

இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காயத்திலிருந்து இஷாந்த் சர்மா முழுவதுமாக மீண்டுவிட்டார். எனினும் டெஸ்ட் ஆட்டத்துக்கான உடற்தகுதியை அடையவில்லை. அதனால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

32 வயது வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, 97 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT