செய்திகள்

இரண்டு வருடங்களாக ஒரு சதமும் இல்லை: இதன் முடிவு தான் என்ன விராட் கோலி?

விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது.

ச. ந. கண்ணன்

2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். 

அன்றைய தினம் யாராவது ஒருவர், அடுத்த இரு வருடங்களுக்கு விராட் கோலி ஒரு சதமும் அடிக்க மாட்டார் எனக் கூறியிருந்தால் அதை நம்பியிருப்போமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் ஒரு அரை சதம் கூட எடுக்கவில்லை கோலி. முதல் இன்னிங்ஸில் 35 ரன்கள் எடுத்த கோலி, இன்று 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆக, இம்முறையும் சதமில்லை. 2020, 2021 என இரு வருடங்களிலும் கோலியால் ஒரு சதமும் அடிக்க முடியவில்லை. 

விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது. ஒரு சதமாவது அடித்தால் நல்லது என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள். 

கோலி சதமடிக்காமல் இருந்த காலகட்டம்

60 இன்னிங்ஸ் - நவ. 2019 - தற்போது வரை
25 இன்னிங்ஸ் - பிப். 2014 - அக். 2014
24 இன்னிங்ஸ் - பிப். 2011 0 செப். 2011

கோலியின் கடைசி 60 இன்னிங்ஸ்: 2078 ரன்கள், அரை சதங்கள் - 20 (அதிகபட்சம் 94*).

ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக ஆகஸ்ட் 2019-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்தார். யார் கண் பட்டதோ, இன்றுவரை மற்றொரு சதத்தைக் காண முடியவில்லை. (சர்வதேச டி20யில் ஒரு சதமும் அடித்ததில்லை.)

இதன் முடிவு தான் என்ன கோலி? ஒரு பெரிய சதமடித்து இன்பதிர்ச்சி அளிக்கப் போகிறாரா? அந்நாளுக்காகக் காத்திருக்கலாமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT