செய்திகள்

முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகள்: ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை

DIN


முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார்.

கவுன்டி கிரிக்கெட்டில் லான்கஷைர் அணிக்காக விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன், கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸாக் கிராலே, ஜோர்டன் காக்ஸ், ஆலிவர் ராபின்சன், ஜேக் லீனிங், ஹெய்னோ குன், மேட் மில்ன்ஸ் மற்றும் ஹாரி ஹாட்மோர் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தினார். இதனால், கென்ட் அணி 34 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

இதில் குன் விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம், முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன். 162 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 617 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT