செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து 258/7 (ஹைலைட்ஸ் விடியோ)

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.

DIN


நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட், பிர்மிங்ஹமில் நடைபெறுகிறது. 

காயம் காரணமாக நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் விலகினார்கள். இதனால் டாம் லதம் கேப்டனாகச் செயல்படுகிறார். வில்லியம்சனுக்குப் பதிலாக வில் யங்கும் வாட்லிங்குக்குப் பதிலாக டாம் பிளெண்டல்லும் நியூசி. அணியில் தேர்வாகியுள்ளார்கள். 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 81 ரன்கள் எடுத்தார். லாரன்ஸ் 67, மார்க் வுட் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT