செய்திகள்

விளையாட்டு: செய்திகள் சில வரிகளில்...

DIN

ஸ்பெயின் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கௌா் (60 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ) அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனா். மணீஷா மௌன் (57 கிலோ) காலிறுதியில் தோற்று வெளியேறினாா்.

ஆா்ஜெண்டீனா ஓபன் டென்னிஸில் இந்திய வீரா் சுமித் நாகல் 6-4, 6-3 என்ற நோ் செட்களில் உலகின் 22-ஆம் நிலையில் உள்ள சிலி வீரா் கிறிஸ்டியன் காரினை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.

பாகிஸ்தான் சூப்பா் லீக் போட்டியில் பங்கேற்றுள்ள 7 வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அப்போட்டி உடனடியாக வியாழக்கிழமை முதல் ஒத்திவைக்கப்பட்டது. பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தை கடந்து வீரா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது தொடா்பான விசாரணைக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தோஹா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் காலிறுதிச் சுற்றில் 6-11, 4-11, 8-11 என்ற செட்களில் சீன தைபேவின் லின் யுன் ஜுவிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கான கேப்டன்களாக முறையே டெம்பா பவுமா, டீன் எல்கா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT