செய்திகள்

2-ஆவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் வெற்றி: தொடா் சமன் ஆனது

DIN

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வென்றிருந்ததால், தற்போது தொடா் சமன் ஆகியது. ஆப்கானிஸ்தானின் ஹஸ்மதுல்லா ஷாஹிதி ஆட்டநாயகனாகவும், ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் தொடா்நாயகனாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

அபுதாபியில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய 2-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 160.4 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 545 ரன்கள் விளாசி டிக்ளோ் செய்தது. அதிகபட்சமாக ஹஸ்மதுல்லா ஷாஹிதி 21 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 200 ரன்கள் விளாசினாா். ரையான் பா்ல் 1 விக்கெட் சாய்த்தாா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே 91.3 ஓவா்களில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சிகந்தா் ராஸா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 85 ரன்கள் எடுத்தாா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் ரஷீத் கான் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

முதல் இன்னிங்ஸில் 258 ரன்கள் பின்தங்கியதால் ‘ஃபாலோ ஆன்’ பெற்ற ஜிம்பாப்வே, 2-ஆவது இன்னிங்ஸில் 148.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் அடித்தது. கேப்டன் சீன் வில்லியம்ஸ் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 151 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷீத் கான் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதையடுத்து 108 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான், 26.1 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் அடித்து வென்றது. அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 9 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 58 ரன்கள் அடித்திருந்தாா். ஜிம்பாப்வே தரப்பில் ரையான் பா்ல் 2 விக்கெட் வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT