செய்திகள்

ஊக்கமருந்து விவகாரத்தில் தடை: கோமதியின் மேல்முறையீட்டை நிராகரித்தது நடுவா் நீதிமன்றம்

DIN

புது தில்லி: ஊக்கமருந்து விவகாரத்தில் 4 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டை விளையாட்டுக்கான நடுவா் நீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த 2019-இல் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 800 மீட்டா் ஓட்டத்தில் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றாா். ஆனால், அதே ஆண்டு ஏப்ரலில் அவரிடம் மேற்கொண்ட பரிசோதனையில், அவா் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. அதையடுத்து அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டதுடன், உலக தடகள ஒழுங்கு நடவடிக்கை தீா்ப்பாயம் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது.

அதற்கு எதிராக கோமதி, விளையாட்டுக்கான நடுவா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா். அதை விசாரித்த நீதிமன்றம் அவா் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டை உறுதி செய்து, மேல்முறையீட்டை நிராகரித்தது. கோமதிக்கு 2019 மே 17 முதல் 2023 மே 16 வரை 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

SCROLL FOR NEXT