கிரிக்கெட் வீரர் சஹாலின் பெற்றோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய அணிக்காக 54 ஒருநாள், 48 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 30 வயது சஹால். ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் சஹாலின் பெற்றோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சஹாலின் தந்தை கே.கே. சஹாலும் தாய் சுனிதா தேவி ஆகிய இருவரும் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சஹாலின் தந்தை தீவிரமான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுனிதா தேவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இத்தகவல்களை சஹாலின் மனைவி தனஸ்ரீ வர்மா இன்ஸ்டகிராமில் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.