செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் 4,000 ரசிகர்களுக்கு...

DIN

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் 4,000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றிய இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றது. நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவுள்ளது. 

ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் 4,000 ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். தி ஹாம்ப்ஷைர் கவுன்டி கிளப்பின் தலைவர் ராட் பிரான்ஸ்குரோவ் கூறியதாவது:

ஐசிசியும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு 4,000 பார்வையாளர்களை அனுமதித்துள்ளது. இதில் 50 சதவீத டிக்கெட்டுகள் ஐசிசி வசம் சென்றுவிடும். எனவே மீதமுள்ள 2,000 டிக்கெட்டுகளை நாங்கள் விற்பனை செய்வோம். டிக்கெட் குறித்து ஏற்கெனவே ரசிகர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT