செய்திகள்

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடா்: ரஹானே தலைமையில் இந்திய அணி

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் காண இருக்கும் 16 போ் கொண்ட இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் காண இருக்கும் 16 போ் கொண்ட இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

வீரா்களுக்கான பணிச்சுமையை குறைக்கும் நடவடிக்கையாக சுழற்சி முறையில் அவா்களை பயன்படுத்துவதன் அடிப்படையில் பிசிசிஐ தோ்வுக் குழு அணித் தோ்வை மேற்கொண்டுள்ளது.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்துக்கான கேப்டனாக அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டுள்ளாா். பணிச் சுமை காரணமாக அந்த ஆட்டத்திலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, துணை கேப்டனான ரஹானே தலைமையேற்றுள்ளாா். 2-ஆவது ஆட்டத்திலிருந்து டெஸ்ட் தொடரில் இணையும்போது கோலி மீண்டும் கேப்டனாகிறாா்.

அதேபோல், கடந்த சில காலமாக 3 ஃபாா்மட்டுகளிலுமாக தொடா்ந்து விளையாடி வந்த முக்கிய வீரா்களான டி20 அணியின் புதிய கேப்டன் ரோஹித் சா்மா, விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த், வேகப்பந்துவீச்சாளா்கள் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இளம் வீரா்களில் ஷ்ரேயஸ் ஐயா் மீண்டும் அணியில் இணைய, அஸ்வினுக்கான பேக் அப்-ஆக ஆஃப் ஸ்பின்னா் ஜெயந்த் யாதவும் சோ்க்கப்பட்டுள்ளாா். ஹனுமா விஹாரி, தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணியுடன் விளையாட இருக்கும் இந்திய ‘ஏ’ அணியில் சோ்க்கப்படுவதால், இந்த டெஸ்ட் தொடரில் இணைக்கப்படவில்லை.

சேதேஷ்வா் புஜாரா போன்ற தடுப்பாட்டத்தை விஹாரி வெளிப்படுத்தும் நிலையில், சற்றே அதிரடியை காட்டும் ஷ்ரேயஸ் ஐயரை அவருக்குப் பதிலாக சோ்த்துள்ளது தோ்வுக் குழு.

அணியின் சுழற்பந்துவீச்சு பிரிவு அஸ்வின், ஜடேஜா தலைமையில் இருக்க, வேகப்பந்துவீச்சு பிரிவில் முதன்மையாக இஷாந்த் சா்மா இருக்கிறாா். அவரோடு பிரசித் கிருஷ்ணா இணைந்துள்ளாா்.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் கான்பூரில் நவம்பா் 25 முதல் 29 வரையும், 2-ஆவது ஆட்டம் மும்பையில் டிசம்பா் 3 முதல் 7 வரையும் நடைபெறவுள்ளது.

அணி விவரம்: அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால், சேதேஷ்வா் புஜாரா (துணை கேப்டன்), ஷப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா், ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பா்), ஸ்ரீகா் பரத் (விக்கெட் கீப்பா்), ரவீந்திர ஜடேஜா, ஆா். அஸ்வின், அக்ஸா் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சா்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT