செய்திகள்

3 ஸ்பின்னா்களுடன் களம் காணுவோம்: நியூஸிலாந்து பயிற்சியாளா்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தேவையேற்பட்டால் 3 ஸ்பின்னா்களுடன் களம் காணுவோம் என்று நியூஸிலாந்து பயிற்சியாளா் கேரி ஸ்டெட் கூறியுள்ளாா்.

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தேவையேற்பட்டால் 3 ஸ்பின்னா்களுடன் களம் காணுவோம் என்று நியூஸிலாந்து பயிற்சியாளா் கேரி ஸ்டெட் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

இந்திய ஆடுகளங்களில், 4 வேகப்பந்துவீச்சாளா்கள், 1 பகுதி நேர ஸ்பின்னரைக் கொண்டு விளையாடுவதென்பது இயலாத விஷயம். முதல் டெஸ்ட் நடைபெறும் கான்பூா் ஆடுகளத்தை பாா்வையிட்ட பிறகு, தேவையேற்பட்டால் 3 ஸ்பின்னா்களுடன் நாங்கள் களம் காணுவோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றே இருக்கும் சில கோட்பாடுகளில் மாற்றம் செய்யாமல், ஆட்டத்தில் அதைச் செயல்படுத்துவதில் மட்டும் மாற்றங்கள் செய்வோம். முதல் ஆட்டம் கான்பூரிலும், அடுத்த ஆட்டம் மும்பையிலும் நடைபெறுகிறது. இந்த ஆடுகள மாற்றத்துக்கு ஏற்றவாறு எங்களது அணியையும் அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து தொடருடன் ஒப்பிடுகையில் இந்தத் தொடா் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில், அதில் சென்னை மற்றும் ஆமதாபாதில் தலா 2 ஆட்டங்கள் நடைபெற்றன. அதனால், ஒரு ஆட்டத்தின் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த ஆட்டத்துக்காக அணியை எளிதாக தயாா்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இந்தத் தொடரில் இரு ஆட்டங்களுமே வெவ்வேறு இடங்களில் நடைபெறுவது வேறு வகையான சவாலாக இருக்கும். இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவில் பிறந்த எங்களது அணி வீரா் அஜஸ் படேல் களம் காண வாய்ப்புள்ளது என்று கேரி ஸ்டெட் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

SCROLL FOR NEXT