செய்திகள்

இங்கிலாந்து, இந்தியா டெஸ்ட் ஆட்டம் நடைபெறுமா? இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம்

DIN


இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை தனி ஒரு டெஸ்ட் ஆட்டமாக நடத்தப்படலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலர் அதிகாரி டாம் ஹாரிசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிடம் அவர் தெரிவித்தது:

"நாங்களும் நிறைய விருப்பங்களைத் தெரிவித்துள்ளோம். சிறிது நேரமே ஆகியுள்ளதால் இதுகுறித்து மேலும் முடிவெடுக்க இன்னும் நேரம் உள்ளது." 

மீண்டும் நடத்தப்படவுள்ள டெஸ்ட் ஆட்டம் இதே தொடரைத் தீர்மானிக்கும் ஆட்டமாக நடத்தப்படுமா அல்லது தனியொரு டெஸ்ட் ஆட்டமாக நடத்தப்படுமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தனி டெஸ்ட் ஆட்டமாகவே கருதப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

முன்னதாக, இதுபற்றி பிசிசிஐ தெரிவித்தது:

"பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றின் இடையே வலுவான உறவு உள்ளது. அதன் அடிப்படையில் 5-வது டெஸ்டை வேறொரு தருணத்தில் நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளது. இரு கிரிக்கெட் வாரியங்களும் இதுகுறித்து திட்டமிட்டு ஒரு முடிவு எடுக்கப்படும். வீரர்களின் பாதுகாப்பில் பிசிசிஐ எப்போதும் அக்கறை செலுத்தும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி. ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT