செய்திகள்

வில்லியம்சன் ராஜிநாமா: நியூசி டெஸ்ட் அணிக்குப் புதிய கேப்டன்!

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாகப் பிரபல வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

DIN

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாகப் பிரபல வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

32 வயது வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக 88 டெஸ்டுகள், 158 ஒருநாள், 87 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி வென்றது. 

இந்நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் வில்லியம்சன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடப் போவதாக அறிவித்துள்ள வில்லியம்சன், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நியூசி. அணியின் கேப்டனாகத் தொடர்வதாகவும் கூறியுள்ளார். 

செளதி

பிரண்டன் மெக்கல்லமுக்கு அடுத்ததாக 2016-ல் நியூசிலாந்து கேப்டனான வில்லியம்சன், 40 டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கி, 22 வெற்றிகளைப் பெற்றுள்ளார். 10 டெஸ்டுகளில் தோல்வியடைந்து 8 டெஸ்டுகளை டிரா செய்துள்ளார். 

இதையடுத்து நியூசிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக டிம் செளதி நியமிக்கப்பட்டுள்ளார். 1 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களுக்கு கேப்டனாகப் பணியாற்றியுள்ளார் டிம் செளதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி ஸ்பெஷல்... மிருணாள் தாக்குர்!

நெல் கொள்முதல் செய்யாமல் காலந்தாழ்த்தி வரும் திமுக அரசு: நயினார் கண்டனம்

தீப ஒளி... ரகுல் ப்ரீத் சிங்!

பாசில் ஜோசப், டோவினோ தாமஸ், வினித் ஸ்ரீனிவாசன் கூட்டணி... அதிரடி பட டீசர்!

சைபர் மோசடியில் புகார் அளிப்பது ஏன் அவசியம்? எப்படி செய்வது?

SCROLL FOR NEXT