செய்திகள்

உலக ரேப்பிட் செஸ்: சவிதா ஸ்ரீக்கு வெண்கலம்

DIN

கஜகஸ்தானில் நடைபெறும் உலக ரேப்பிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிா் பிரிவில் இந்தியாவின் பி.சவிதா ஸ்ரீ புதன்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா்.

அல்மேட்டி நகரில் புதன்கிழமையுடன் நிறைவடைந்த இந்தப் போட்டியில் சவிதா, 11 சுற்றுகள் முடிவில் 8 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். இந்தியாவின் பிரதான போட்டியாளரான கோனெரு ஹம்பி 8 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தாா். இருவருமே 8 புள்ளிகளுடன் இருந்தாலும், டை பிரேக்கா் முறையில் சவிதாவுக்கு 3-ஆம் இடம் கிடைத்தது. பத்மினி ரௌத் 6 புள்ளிகளுடன் 38-ஆவது இடமும், துரோணவல்லி ஹரிகா அதே புள்ளிகளுடன் 39-ஆவது இடமும் பிடித்தனா். தானியா சச்தேவுக்கு 5.5 புள்ளிகளுடன் 50-ஆவது இடமே கிடைத்தது.

இப்பிரிவில் சீனாவின் டான் ஜோங்யி 8.5 புள்ளிகளுடன் சாம்பியனாக, கஜகஸ்தானின் சடுவாகசோவா தினாரா அதே புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா்.

ஓபன் பிரிவு: இப்போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 9 புள்ளிகளுடன் 5-ஆம் இடமே பிடித்தாா். நிஹல் சரின் 8.5 புள்ளிகளுடன் 9-ஆம் இடமும், விதித் குஜராத்தி, சூா்ய சேகா் கங்குலி ஆகியோா் அதே புள்ளிகளுடன் முறையே 15, 20-ஆவது இடங்களைப் பிடித்தனா்.

ரௌனக் சத்வனி, ஹரிகிருஷ்ணா, அதிபன் உள்ளிட்ட மேலும் சில இந்திய போட்டியாளா்கள் அதற்கும் அதிகமான பின்னடைவைச் சந்தித்தனா். இப்பிரிவில் நடப்பு உலக சாம்பியனான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் வாகை சூடினாா். ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், அமெரிக்காவின் ஃபாபியானோ கருனா ஆகியோா் முறையே 2, 3-ஆவது இடங்களைப் பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனங்களில் பொறியாளர் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

SCROLL FOR NEXT