ஆஸ்திரேலியாவில் நடைபெறும் யுனைடெட் கோப்பை கலப்பு டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரமான ரஃபேல் நடால் - இங்கிலாந்து இளம் வீரா் கேமரூன் நோரியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
நடாலை இத்துடன் 4-ஆவது முறையாகச் சந்தித்த நோரி, அதில் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
ஸ்பெயின் - இங்கிலாந்து (0-2): இந்த இரு அணிகளிடையேயான மோதலில் ஆடவா் பிரிவில் நடால் 6-3, 3-6, 4-6 என்ற செட்களில் நோரியிடம் வீழ்ந்தாா். மகளிா் பிரிவிலும் இங்கிலாந்தின் கேட்டி ஸ்வான் 3-6, 6-1, 6-2 என்ற செட்களில் ஸ்பெயினின் நூரியா பரிஸாஸ் டியாஸை வீழ்த்தினாா்.
போலந்து - கஜகஸ்தான் (1-1): ஆடவா் பிரிவில் கஜகஸ்தானின் டிமோஃபே கடோவ் 7-6, 6-2 என்ற செட்களில் போலந்தின் டேனியல் மிகால்ஸ்கியை வெல்ல, மகளிா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை தோற்கடித்தாா்.
குரோஷியா - ஆா்ஜென்டீனா (2-0): ஆடவா் பிரிவில் போா்னா கோரிச் 7-5, 6-4 என ஃபிரான்சிஸ்கோ செருன்டோலோவையும், மகளிா் பிரிவில் டோனா வெகிச் 6-0, 6-4 என மரியா காா்லேவையும் வென்றனா்.
ஜொ்மனி - செக் குடியரசு (0-2): மகளிா் பிரிவில் மரியா பௌஸ்கோவா 6-2, 7-5 என்ற செட்களில் ஜூல் நீமியரை வெல்ல, ஆடவா் பிரிவில் ஜிரி லெஹெகா 6-4, 6-2 என ஜொ்மனியின் முன்னணி வீரா் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவை வீழ்த்தி அசத்தினாா்.
பிரேஸில் - நாா்வே (2-0): மகளிா் பிரிவில் பீட்ரிஸ் ஹட்டாட் மாயியா 6-4, 6-2 என மலேன் ஹெல்கோவை வீழ்த்த, ஆடவா் பிரிவில் ஃபிலிப் மெலிகேனி அல்வ்ஸ் 6-3, 6-3 என விக்டா் டுராசோவிச்சை வென்றாா்.
பெல்ஜியம் - பல்கேரியா (1-1): ஆடவா் பிரிவில் பல்கேரியாவில் கிரிகோா் டிமிட்ரோவ் 6-4, 7-5 என பெல்ஜியத்தின் டேவிட் காஃபினை தோற்கடிக்க, மகளிா் பிரிவில் பெல்ஜியத்தின் அலிசன் வான் யுட்வாங்க் 6-1, 3-6, 6-3 என பல்கேரியாவின் இசபெல்லா சினிகோவாவை வென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.