செய்திகள்

கோலி விலகல்: பிசிசிஐ, ஜெய் ஷா ட்வீட்

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்ததையடுத்து, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN


டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்ததையடுத்து, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி இன்று (சனிக்கிழமை) மாலை அறிவித்தார்.

கோலியின் அறிவிப்பைப் பகிர்ந்து பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"சிறந்த தலைமைப் பண்பால் டெஸ்ட் அணியை இதுவரை இல்லாத உச்சத்துக்கு அழைத்துச் சென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்துகள். அவர் 68 டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். 40 ஆட்டங்களில் வெற்றி பெற்று வெற்றிகரமான கேப்டனாக உள்ளார்." 

ஜெய் ஷா:

"இந்திய அணிக்கு சிறப்பான கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு வாழ்த்துகள். சிறந்த உடற்தகுதியைக் கொண்ட கருணையற்ற அணியாக, கோலி மாற்றிய இந்திய அணி, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறப்பாக செயல்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பெற்ற வெற்றி சிறப்பானது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT