செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய செஸ் அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

DIN

செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய செஸ் அணியின் ஆலோசகராகப் பிரபல வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி, செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெறுகிறது. 12 வருடங்கள் கழித்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் செஸ் மீண்டும் இடம்பெறுகிறது. 2020 போட்டியில் இந்திய அணி இரு வெண்கலப் பதக்கங்களை வென்றது. 2006 தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இரு தங்கங்களை வென்றது. 

செஸ் விளையாட்டில் நான்கு தங்கங்களை வெல்ல வாய்ப்புள்ளதால் அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது அகில இந்திய செஸ் சம்மேளனம்.  ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக முதற்கட்ட இந்திய செஸ் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேசத் தரவரிசைப்படி ஆடவர், மகளிர் பிரிவில் தலா 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தலா 5 வீரர்களைக் கொண்ட இறுதிப் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். 

இந்திய அணிக்கான ஆலோசகராகப் பிரபல வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 3 முதல் அனைத்து வீரர்களுக்கும் ஆனந்த் பயிற்சியளிக்கவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT