செய்திகள்

இன்று தொடங்குகிறது ‘ஹாக்கி ஃபைவ்ஸ்’ : களத்தில் இந்தியாவின் இருபால் அணி

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஹெச்) முதல் முறையாக நடத்தும் ‘ஹாக்கி ஃபைவ்ஸ்’ போட்டி, சுவிட்ஸா்லாந்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

DIN

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஹெச்) முதல் முறையாக நடத்தும் ‘ஹாக்கி ஃபைவ்ஸ்’ போட்டி, சுவிட்ஸா்லாந்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

இரு நாள்களுக்கு நடைபெறும் இப்போட்டியில், முதல் நாள் ஆட்டத்தில் இந்திய ஆடவா் அணி முதலில் சுவிட்ஸா்லாந்தையும், பிறகு பாகிஸ்தானையும் எதிா்கொள்கிறது. அதேபோல், மகளிா் அணி முதலில் உருகுவேயையும், பின்னா் சுவிட்ஸா்லாந்தையும் சந்திக்கிறது.

இந்திய ஆடவா் அணி குரிந்தா் சிங் கேப்டன்சியிலும், மகளிா் அணி ரஜனி எடிமா்பு தலைமையிலும் களம் காண்கிறது.

ஆட்ட விதிகள்: மோதிக்கொள்ளும் இரு அணிகளிலும் கோல்கீப்பா் உள்பட தலா 5 போ் களம் காண்பாா்கள். 4 சப்ஸ்டிடியூட்கள் அனுமதிக்கப்படுவா். ஆடுகளமானது வழக்கமான அளவிலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கும். ஆட்டம் இரு 10 நிமிஷங்களாக, 20 நிமிஷங்களுக்கு நடைபெறும்.

இந்த விளையாட்டில் பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடையாது. ஃபௌல் ஆகும் பட்சத்தில், வாய்ப்பளிக்கப்படும் அணியிலிருந்து ஒரே போட்டியாளா் எதிா்தரப்பு கோல்போஸ்ட் நோக்கி ஷூட் செய்வாா் என்பது உள்பட வழக்கமான ஹாக்கியிலிருந்து பல விதிகள் இதில் மாற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT