படம் : டிவிட்டர், இங்கிலாந்து கிரிக்கெட் | ஜோ ரூட் 
செய்திகள்

ஜோ ரூட் சதம்: லார்ட்ஸ் முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து- நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 277 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 

DIN

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து- நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 277 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 132 ரன்களும், இங்கிலாந்து 141 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 285 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

3ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 61 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. நியூசிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது என இருந்தது. 

4வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்களுடனும் பென் ஃபோக்ஸ் 32 ரன்களுடனும் 279 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 

ஜோ ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT