கோப்புப் படம் (மொயின் அலி) 
செய்திகள்

மொயின் அலி -அலெஸ்டர் குக் வாக்குவாதம்?

முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் அலெஸ்டர் குக், இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் மொயின் அலி இருவரின் விவாதம் மீண்டும் பிரச்சினையை கிளப்பியுள்ளது. 

DIN

முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் அலெஸ்டர் குக், இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் மொயின் அலி இருவரின் விவாதம் மீண்டும் பிரச்சினையை கிளப்பியுள்ளது. 

நியூசிலாந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வர்ணனனையாளராக இருக்கும் அலெஸ்டர் குக் தனது சக வர்ணனையாளர் மொயின் அலியை வரவேற்கும் போது ஆஸஷ் தொடரில் முன்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தை நினைவூட்டும் வகையில் பேசினார். 

“நான் அன்று விடுமுறைக்கு பிறகு நேராக ஸ்டூடியோவிற்கு வந்தேன். அப்போது மொயின் அலியை பார்த்தேன். அவர் எப்போதுமே மகிழ்ச்சியாக காணப்படுவார். அப்போது அவர் நான் சிறந்த கேப்டனில்லை, சிறந்த பயிற்சியாளர் இல்லை என கூறினார். அதனால் அப்போது  வைரலானது. இப்போது அதற்கு நான் எதிர்த்து பேச வரவில்லை” என குக் வேடிக்கையாக கூறினார். 

“அது ஒரு சிறிய விவகாரம். பொதுவாக ஜோ ரூட் கிரிக்கெட் வீரர்களிடம் உங்களைவிட அனுதாபமாக நடந்துக் கொள்வார். மேலும்  நான் எந்த இடத்திலும் உங்களை சிறந்த கேப்டனில்லை, சிறந்த பயிற்சியாளர் இல்லை எனக் கூறவில்லை. அதை நீங்கள் தனிப்பட்ட விதத்தில் எடுத்துக்கொண்டு பெரிதாக்கிவிட்டீர்கள்” என மொயின் அலி அதற்கு பதிலளித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT