கோப்புப் படம் 
செய்திகள்

54வது பந்தில் முதல் ரன் எடுத்த வீரர், கிண்டலாக பாராட்டிய சகவீரர்கள்

ரஞ்சிக்கோப்பைத் தொடரில் உத்தர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாசஷ்வி ஜெய்ஸ்வால் 54வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்தார்.

DIN

ரஞ்சிக்கோப்பைத் தொடரில் உத்தர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாசஷ்வி ஜெய்ஸ்வால் 54வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்தார்.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாசஷ்வி ஜெய்ஸ்வால் உத்தர பிரதேச அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

54வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்த அவர் தனது சகவீரர்களை நோக்கி பேட்டினை உயர்த்திக் காட்டினார். அதற்கு அவரது சக வீரர்கள் கிண்டலாக கைத்தட்டி தங்களது பாராட்டினைத் தெரிவித்தனர்.

கிரிக்கெட் வரலாற்றில் இது போன்று ஒரு பேட்ஸ்மேன் அதிக பந்துகள் எதிர்கொண்டு தனது முதல் ரன்னை எடுப்பது இது முதல் முறையல்ல. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் கடந்த 2008 ஆம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 40வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்தார். அதன்பின் அவர் ரசிகர்களை நோக்கி பேட்டினை உயர்த்திக் காட்டி மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

அம்மனின் அவதாரங்கள்

SCROLL FOR NEXT