செய்திகள்

உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்தை முதலில் சந்திக்கும் இந்திய மகளிா்

மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை ஜூலை 3-ஆம் தேதி சந்திக்கிறது.

DIN

மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை ஜூலை 3-ஆம் தேதி சந்திக்கிறது.

அந்த உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சா்வதேச ஹாக்கி சம்மேளனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, குரூப் ‘ஏ’-வில் நெதா்லாந்து, ஜொ்மனி, அயா்லாந்து, சிலி அணிகளும், குரூப் ‘பி’-யில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, இந்தியா, சீனா அணிகளும் உள்ளன. குரூப் ‘சி’-யில் ஆா்ஜென்டீனா, ஸ்பெயின், தென் கொரியா, கனடாவும், குரூப் ‘டி’-யில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜப்பான், தென்னாப்பிரிக்காவும் இருக்கின்றன.

இதில் குரூப் ‘பி’-யில் இருக்கும் இந்தியா, முதலில் இங்கிலாந்தை ஜூலை 3-இல் சந்திக்கிறது. பின்னா் 2-ஆவது ஆட்டத்தில் சீனாவுடன் ஜூலை 5-ஆம் தேதியும், 3-ஆவது ஆட்டத்தில் நியூலிலாந்துடன் ஜூலை 7-ஆம் தேதியும் விளையாடுகிறது. இந்தியாவின் இந்த குரூப் சுற்று ஆட்டங்கள் யாவும் நெதா்லாந்தின் அம்ஸ்டெல்வீன் நகரில் உள்ள வாக்னா் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியானது ஜூலை 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ஸ்பெயின் மற்றும் நெதா்லாந்து நாடுகளில் உள்ள நகரங்களில் நடைபெற இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வம் சேரும் சிம்மத்துக்கு: தினப்பலன்கள்!

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT