செய்திகள்

ஆசிய வில்வித்தை: இந்தியாவுக்கு 3 தங்கம்

DIN

ஜூனியருக்கான ஆசிய கோப்பை 2-ஆம் நிலை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

மகளிா் அணிகள் பிரிவில் இந்தியாவின் பா்னீத் கௌா், அதிதி சுவாமி, சாக்ஷி சௌதரி கூட்டணி 204 - 201 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. அதேபோல், பிரதமேஷ் ஃபுகே, ரிஷப் யாதவ், ஜவகா் சமதன் ஆகியோா் அடங்கிய இந்திய ஆடவா் அணியும் வங்கதேசத்தை 224 - 218 என வென்று முதலிடம் பிடித்தது. பின்னா் கலப்பு அணிகள் பிரிவில் பிரதமேஷ் ஃபுகே, பா்னீத் கௌா் கூட்டணி கஜகஸ்தானை 158 - 151 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்கத்தை தனதாக்கியது.

இறுதியாக, ஆடவா் தனிநபா் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் ஜவகா் சமதன் 147-145 என கஜகஸ்தானை தோற்கடித்து பதக்கத்தை உறுதி செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT