செய்திகள்

உலகக் கோப்பை: ஸ்பெயின் சாம்பியன்

இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டது.

DIN

இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டது.

இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி, 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் கொலம்பிய அணி விஷயத்தில் விதி விளையாடியது. அந்த அணியின் அனா மரியா குஸ்மான் 82-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடிக்க, அது ஸ்பெயினுக்கு சாதகமாகிப் போனது. எஞ்சிய நேரத்தில் கொலம்பியாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஸ்பெயின் வாகை சூடியது.

நைஜீரியா 3-ஆம் இடம்: இப்போட்டியில், 3-ஆவது இடத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் ஜொ்மனியை வீழ்த்தியது. முன்னதாக இரு அணிகளும் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆக, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில், நைஜீரியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT