செய்திகள்

ஆசியக் கோப்பையில் மிகக் குறைவான ரன்களை எடுத்த ஹாங்காங் அணி! 

DIN

ஆசியக் கோப்பை டி20 வரலாற்றில் மிகக் குறைவான ரன்களை எடுத்து ஹாங்காங் அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. 

ஆசியக் கோப்பையின் நேற்றைய (செப்.2) போட்டியில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஹாங்காங் 10.4 ஓவா்களில் 38 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

பின்னா் 194 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹாங்காங்கில் அனைத்து வீரா்களுமே ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனா். ஒருவா் டக் அவுட்டானாா். கேப்டன் நிஸாகத் கான் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் அடித்ததே அதிகபட்சம். பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாதாப் கான் 4, முகமது நவாஸ் 3, நசீம் ஷா 2, ஷாநவாஸ் தஹானி 1 விக்கெட் வீழ்த்தினா். இதன் மூலம் பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ‘சூப்பா் 4’ சுற்றுக்குத் தகுதிபெற்றது. அதில் இந்தியாவுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.

ஹாங்காங் அணியின் இந்த ஸ்கோர் டி20 வரலாற்றிலே 9வது மிகக்குறைவான ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகக் குறைவான ரன்களை எடுத்த அணியில் துருக்கி முதலிடத்தில் உள்ளது. 

  1. துருக்கி - 21 ரன்கள் 
  2. லெஸோதோ - 29 ரன்கள் 
  3. துருக்கி - 28 ரன்கள் 
  4. தாய்லாந்து - 30 ரன்கள் 
  5. துருக்கி - 32 ரன்கள் 
  6. பின்லாந்து - 33 ரன்கள் 
  7. ஃபிலிப்பைன்ஸ் - 36 ரன்கள் 
  8. பனாமா - 37 ரன்கள் 
  9. ஹாங்காங் - 38 ரன்கள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT