ஜெயிஸ்வால் (கோப்புப் படம்) 
செய்திகள்

துலீப் கோப்பை: இன்னொரு இரட்டைச் சதமடித்த இளம் வீரர் ஜெயிஸ்வால்!

துலீப் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இரட்டைச் சதமடித்து சாதனை செய்துள்ளார்...

DIN

துலீப் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இரட்டைச் சதமடித்து சாதனை செய்துள்ளார் மேற்கு மண்டல அணியைச் சேர்ந்த 20 வயது ஜெயிஸ்வால்.

கோயம்புத்தூரில் துலீப் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் ஹெட் படேல் 98 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தெற்கு மண்டல அணி, 83.1 ஓவர்களில் 327 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. தமிழக வீரர் பாபா இந்திரஜித் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களில் 3 சதங்கள், ஒரு அரை சதமெடுத்த இந்திரஜித் (3 ஆட்டங்களில் 396 ரன்கள், சராசரி - 99.00), துலீப் கோப்பை இறுதி ஆட்டத்திலும் சதமடித்து அசத்தியுள்ளார். 

இந்நிலையில் 2-வது இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி அபாரமாக விளையாடி வருகிறது. அந்த அணி 3-ம் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் எடுத்துள்ளது. 20 வயது தொடக்க வீரர் ஜெயிஸ்வால், 244 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். துலீப் கோப்பை காலிறுதியில் இரட்டைச் சதமடித்த ஜெயிஸ்வால், இறுதிச்சுற்றிலும் இன்னொரு இரட்டைச் சதமடித்து சாதனை படைத்துள்ளார். ஜெயிஸ்வால் 209, சர்ஃபராஸ் கான் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஷ்ரேயஸ் ஐயர் 71 ரன்கள் எடுத்தார். 3-ம் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி, 319 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

முதல்தர இறுதிப் போட்டியில் குறைந்த வயதில் (20 வருடங்கள் 269 நாள்கள்) இரட்டைச் சதமடித்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ஜெயிஸ்வால். இதற்கு முன்பு அஜித் வடேகர், 1962-ல் 20 வருடங்கள் 354 நாள்களில் இரட்டைச் சதமடித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT