உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்த தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா
மூன்று மாத இடைவெளியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்துள்ளார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.
மூன்று மாத இடைவெளியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்துள்ளார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.
கடந்த பிப்ரவரி மாதம் இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா. இதனால் அவருக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்தன.
இந்நிலையில் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து அசத்தியுள்ளார் பிரக்ஞானந்தா. இணையம் வழியாக நடைபெறும் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. 40-வது நகர்த்தல் வரை ஆட்டம் டிரா ஆவது போல இருந்தது. ஆனால் இதன்பிறகு கார்ல்சன் ஒரு தவறு செய்தார். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.
Advertisement
Advertisement
தற்போது 11-வது வகுப்புத் தேர்வுக்காகத் தயாராகி கொண்டிருக்கும் பிரக்ஞானந்தா இந்த வெற்றி கூறும்போது, என்னுடைய ஆட்டத்தின் தரம் பற்றி எனக்குத் திருப்தியில்லை. சில உத்திகளை நான் தவறவிட்டு விட்டேன். நாளை இன்னும் உஷாராக நான் விளையாட வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.