சரக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
சரக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
விமான நிலையங்களில் வான்வழி சரக்கு வணிகத்தின் வளர்ச்சியை நிர்வகிப்பதற்காக, இந்திய விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனமான ஏஏஐ கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைடு சர்வீசஸ் நிறுவனம். 2016 இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சரக்கு கையாளுதல், லாஜிஸ்டிக்ஸ் சேவைகள், கிடங்கு வசதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை நிர்வகித்து வருகிறது.
நாட்டின் விமான சரக்கு போக்குவரத்து துறையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 62 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விபரம் வருமாறு:
Advertisement
Advertisement
வேலைவாப்பு அறிவிப்பு எண். AAICLAS/HR/CHQ/Rectt./Asstt.(Sec)/2026
பணி: Assistant (Security)
மொத்த காலியிடங்கள்: 62
வயது வரம்பு: 1.6.2026 தேதியின்படி 21-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.21,500), இரண் டாம் ஆண்டு ரூ.22,000), மூன்றாம் ஆண்டு ரூ.22,500.
தகுதி: +2-வில் முதல் வகுப்பில் (60%) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, மருத்துவத் தகுதி, உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ. 500. எஸ்சி, எஸ்டி,இடபுள்யுஎஸ் பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும் .
விண்ணப்பிக்கும் முறை: www.aaiclas.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
AAICLAS VACANCY NOTICE 2026 for Assistant (Security) on Fixed Term Contract for a period of three years on PAN India basis...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.