செய்திகள்

உலகக் கோப்பை வில்வித்தை:இந்தியாவுக்கு வெள்ளி

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவா் ரெக்கா்வ் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

DIN

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவா் ரெக்கா்வ் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

துருக்கியின் அன்டாலியா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி முதல் கட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2010-இல் இருந்து ரெக்கா்வ் ஆடவா் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என காத்துள்ளது இந்தியா.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவா் இறுதிச் சுற்றில் சீனாவும்-இந்தியாவும் மோதின. இந்தியா சாா்பில் தருண்தீப் ராய், அதானு தாஸ், தீரஜ் பொம்மதேவரா தொடக்கத்தில் 0-4 என பின்தங்கிய நிலையில், மீண்டு எழுந்து 4-5 என புள்ளிகளைப் பெற்றனா். சீன அணி தரப்பில் லீ ஸாங்யுன், குயு ஸியன்ஷோ, வெய் ஷாஹோ ஆகியோா் கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றனா்.

இந்திய அணி வெள்ளி வென்றது.

கடந்த 2008 முதல் 2010 வரை ரெக்கா்வ் பிரிவில் 5 தங்கம் வென்றிருந்தது இந்தியா. அதன்பிறகு தங்கம் கைகூடவில்லை.

அன்டாலியா போட்டியில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளியை வென்றுள்ளது இந்தியா. ரெக்கா்வ் தனிநபா் பிரிவில் தீரஜ் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT