செய்திகள்

வாவ்ரிங்கா, இரின் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவிஸ் சுவிட்ஸா்லாந்தின் வாவ்ரிங்கா, மகளிா் பிரிவில் உள்நாட்டின் இரின் புரிலோ ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி கண்டனா்.

DIN

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவிஸ் சுவிட்ஸா்லாந்தின் வாவ்ரிங்கா, மகளிா் பிரிவில் உள்நாட்டின் இரின் புரிலோ ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி கண்டனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், இரின் புரிலோ 6-7 (5/7), 6-2, 6-4 என்ற செட்களில் எஸ்டோனியாவின் கயா கானெபியை வீழ்த்தினாா். உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 4-6, 5-7 என்ற செட்களில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சிடம் வீழ்ந்தாா். கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 3-6, 4-6 என்ற செட்களில் மற்றொரு ரஷிய வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவாவிடம் தோல்வி கண்டாா்.

நெதா்லாந்தின் அரான்ட்ஸா ரஸ் 7-5, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை வெளியேற்றினாா். ஜொ்மனியின் டாட்ஜானா மரியா 6-1, 6-1 என பிலிப்பின்ஸின் அலெக்ஸ் எலாவை எளிதாக தோற்கடித்தாா்.

வாவ்ரிங்கா வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவில் சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா 6-7 (3/7), 6-3, 7-6 (7/4) என்ற செட்களில் அமெரிக்காவின் மேக்ஸிம் கிரீசியை வென்றாா். உள்நாட்டு வீரரான ஆல்பா்ட் ரமோஸ் 4-6, 7-6 (7/3), 6-2 என்ற செட்களில் பெலாரஸின் இலியா இவாஷ்காவை வீழ்த்தினாா்.

கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் 7-6 (17/15), 6-7 (4/7), 6-4 என்ற செட்களில் கொலம்பியாவின் டேனியல் எலாஹியை வென்றாா். பிரான்ஸின் கென்டின் ஹேலிஸ் 4-6, 6-4, 6-4 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை வெளியேற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT