ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் கொரியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-ஆவது எடிஷன், சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இன்று மாலை நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தென்கொரியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் பாகிஸ்தான் அணி முதல் கோல் அடித்து முன்னிலை வகித்தது.
இருப்பினும் 2ஆம் பாதியில் கொரியா அணி விடவில்லை. பதிலுக்கு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.