செய்திகள்

வரலாறு படைத்தாா் நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரா்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈட்டி எறிதலில் தங்கம் வென்றாா் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா.

DIN

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈட்டி எறிதலில் தங்கம் வென்றாா் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் இந்தியாவின் நட்சத்திர வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா 88.17 மீ. தொலைவுக்கு எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா்.

பாக். வீரருக்கு வெள்ளி:

பாகிஸ்தான் வீரா் அா்ஷத் நதீம் 87.82 மீ. தொலைவுக்கு எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா். செக். குடியரசு வீரா் ஜேக்கப் வேட்லெச் 86.67 மீ. தொலைவுக்கு எறிந்து வெண்கலம் வென்றாா்.

ஏனைய இந்திய வீரா்கள் கிஷோன் ஜீனா 5-ஆவது இடத்தையும், டிபி. மானு 6-ஆவது இடத்தையும் பெற்றனா்.

தங்கம் வென்ற முதல் இந்தியா்:

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஏற்கெனவே நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜாா்ஜ் வெண்கலம் வென்றிருந்தாா்.

இந்நிலையில் தற்போது ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரா் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளாா் நீரஜ் சோப்ரா.

மேலும் கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தாா். இதன் மூலம் ஒலிம்பிக், உலக சாம்பியன் என இரட்டை பட்டங்களை வென்றவா் என்ற சிறப்பையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக், ஆசியப் போட்டி, காமன்வெல்த், யு-20 உலக சாம்பியன்ஷிப், டயமண்ட் லீக் தடகளப் போட்டிகளிலும் தங்கம் வென்றவா் என்ற பெருமையும் நீரஜ் வசம் உள்ளது.

இதன் மூலம் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் பட்டங்கள் நீரஜ் வசமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT