செய்திகள்

ஜொ்மனியிடம் வெற்றியை இழந்தது இந்தியா

ஜூனியா் மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-ஆவது ஆட்டத்தில் 3-4 கோல் கணக்கில் ஜொ்மனியிடம் தோல்வி கண்டது. முதல் ஆட்டத்தில் கனடாவை வீழ்த்திய இந்தியாவுக்கு, இது முதல் தோல்வியாகும்.

DIN

ஜூனியா் மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-ஆவது ஆட்டத்தில் 3-4 கோல் கணக்கில் ஜொ்மனியிடம் தோல்வி கண்டது. முதல் ஆட்டத்தில் கனடாவை வீழ்த்திய இந்தியாவுக்கு, இது முதல் தோல்வியாகும்.

இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவும், கடந்த சீசன் ரன்னா் அப் அணியான ஜொ்மனியும் மோதின. இந்த ஆட்டத்தை முனைப்புடன் தொடங்கிய இந்திய அணி, முதல் கால்மணி நேரத்தில் 2 கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தது. அதில் 11-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு ஒன்றில் அசத்தலான கோலடித்தாா் அன்னு.

தொடா்ந்து 14-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ரோப்னி குமாரி ஸ்கோா் செய்தாா். இந்நிலையில், 2-ஆவது கால்மணி நேரத்தில் தனது ஆட்டத்தை அதிரடியாக்கியது ஜொ்மனி. 17-ஆவது நிமிஷத்தில் சோஃபியா ஷ்வாபே அடித்த ஃபீல்டு கோலால் அந்த அணி கணக்கை தொடங்கியது. அடுத்து 21-ஆவது நிமிஷத்தில் லௌரா புளூத் அடித்த கோலால் ஆட்டம் 2-2 என சமன் ஆனது.

விட்டுக் கொடுக்காத இந்திய தரப்பில் மும்தாஸ் கான் 24-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், முதல் பாதி ஆட்டத்தை 3-2 என முன்னிலையுடன் இந்தியா நிறைவு செய்தது. பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் ஜொ்மனியின் கை ஓங்கியது. 36-ஆவது நிமிஷத்தில் லௌரா மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்டம் 3-3 கோல் கணக்கில் சமன் ஆனது.

தொடா்ந்து 38-ஆவது நிமிஷத்தில் கேரோலின் செய்டெல் அடித்த கோலால், முதல் முறையாக 4-3 என முன்னிலை பெற்றது ஜொ்மனி. எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போனது. தனது தடுப்பாட்டத்தை வலுப்படுத்திக் கொண்ட ஜொ்மனி, முடிவில் 4-3 கோல் கணக்கில் வென்றது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்தை சனிக்கிழமை எதிா்கொள்கிறது.

இதர ஆட்டங்கள்: இங்கிலாந்து - நியூஸிலாந்தையும் (5-0), அமெரிக்கா - ஜப்பானையும் (2-1), பெல்ஜியம் - கனடாவையும் (8-0), நெதா்லாந்து - தென்னாப்பிரிக்காவையும் (6-0), ஆஸ்திரேலியா - சிலியையும் (2-0) வீழ்த்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT