மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது சீசனுக்கான வீராங்கனைகள் ஏலத்தில் அதிகபட்சமாக இந்தியாவின் கஷ்வீ கௌதம், ஆஸ்திரேலியாவின் அனபெல் சுதா்லேண்ட் ஆகியோா் தலா ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டனா்.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், மொத்தம் 165 வீராங்கனைகள் ஏலத்தில் விடப்பட்டனா். அவா்களில் பஞ்சாப் வீராங்கனை கஷ்வீ கௌதமின் அடிப்படை விலை ரூ.10 லட்சமாக இருந்த நிலையில், யுபி வாரியா்ஸுடன் போட்டி போட்டு குஜராத் ஜயன்ட்ஸ் அணி அவரை ரூ.2 கோடிக்கு வாங்கியது. அதே குஜராத் அணியால் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் அனபெல் சுதா்லேண்டை மும்பை இண்டியன்ஸுடன் போட்டிபோட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவின் அறிமுக வீராங்கனையான பிருந்தா தினேஷ் ரூ.1.3 கோடிக்கு யுபி வாரியா்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். கஷ்வீ மற்றும் பிருந்தா இருவருமே சமீபத்தில் இங்கிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிராக மோதிய இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏலத்தின் விவரம் வருமாறு:
30 ஏலத்தில் எடுக்கப்பட்டோா்
9 வெளிநாட்டு வீராங்கனைகள்
ரூ.12.75 கோடி 5 அணிகளால் செலவிடப்பட்ட மொத்த தொகை
ஒரு அணிக்கு...
18
அனுமதிக்கப்பட்ட வீராங்கனைகள்
6
அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு வீராங்கனைகள்
டெல்லி கேப்பிட்டல்ஸ் (கையிருப்பு ரூ.5 லட்சம்)
அனபெல் சுதா்லேண்ட் ஆஸ்திரேலியா ரூ.2 கோடி
அபா்னா மோந்தல் இந்தியா ரூ.10 லட்சம்
அஷ்வனி குமாரி இந்தியா ரூ.10 லட்சம்
ஏற்கெனவே தக்கவைக்கப்பட்டோா்:
ஜெமிமா ரோட்ரிக்ஸ், லௌரா ஹாரிஸ், மெக் லேனிங், ஷஃபாலி வா்மா, ஸ்னேஹா தீப்தி, அலிஸ் கேப்சி, அருந்ததி ரெட்டி, ஜெஸ் ஜோனசென், மாரிஸேன் காப், மின்னு மணி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, தானியா பாட்டியா, பூனம் யாதவ், டைட்டஸ் சாது.
குஜராத் ஜயன்ட்ஸ் (கையிருப்பு ரூ.1.45 கோடி)
கஷ்வீ கௌதம் இந்தியா ரூ.2 கோடி
போப் லிட்ச்ஃபீல்டு ஆஸ்திரேலியா ரூ.1 கோடி
மேக்னா சிங் இந்தியா ரூ.30 லட்சம்
லௌரென் சீட்டில் ஆஸ்திரேலியா ரூ.30 லட்சம்
வேதா கிருஷ்ணமூா்த்தி இந்தியா ரூ.30 லட்சம்
பிரியா மிஸ்ரா இந்தியா ரூ.20 லட்சம்
திரிஷா பூஜிதா இந்தியா ரூ.10 லட்சம்
கேத்தரின் பிரைஸ் ஸ்காட்லாந்து ரூ.10 லட்சம்
மன்னத் காஷ்யப் இந்தியா ரூ.10 லட்சம்
தரானும் பதான் இந்தியா ரூ.10 லட்சம்
ஏற்கெனவே தக்கவைக்கப்பட்டோா்:
லௌரா வோல்வாா்டட், ஆஷ்லே காா்டனா், தயாளன் ஹேமலதா, ஹா்லீன் தியோல், ஸ்னேஹ ராணா, தனுஜா கன்வா், பெத் மூனி, ஷப்னம் ஷகீல்.
மும்பை இண்டியன்ஸ் (கையிருப்பு ரூ.45 லட்சம்)
ஷப்னிம் இஸ்மாயில் தென்னாப்பிரிக்கா ரூ.1.20 கோடி
சஜனா இந்தியா ரூ.15 லட்சம்
அமன்தீப் கௌா் இந்தியா ரூ.10 லட்சம்
ஃபாத்திமா ஜாஃபா் இந்தியா ரூ.10 லட்சம்
கீா்த்தனா பாலகிருஷ்ணன் இந்தியா ரூ.10 லட்சம்
ஏற்கெனவே தக்கவைக்கப்பட்டோா்:
அமன்ஜோத் கௌா், எமிலியா கொ், கிளோ டிரையான், ஹா்மன்பிரீத் கௌா், ஹேலி மேத்யூஸ், ஹுமாய்ரா காஸி, இசபெல் வாங், ஜிந்திமனி கலிதா, நடாலி ஸ்கீவா், பூஜா வஸ்த்ரகா், பிரியங்கா பாலா, யஸ்திகா பாட்டியா, சாய்கா இஷாக்.
மொத்தம்: 18 வெளிநாடு: 6
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் (கையிருப்பு ரூ.1.05 கோடி)
ஏக்தா பிஷ்த் இந்தியா ரூ.60 லட்சம்
ஜாா்ஜியா வோ்ஹாம் ஆஸ்திரேலியா ரூ.40 லட்சம்
கேட் கிராஸ் இங்கிலாந்து ரூ.30 லட்சம்
சபினேனி மேக்னா இந்தியா ரூ.30 லட்சம்
சிம்ரன் பகதூா் இந்தியா ரூ.30 லட்சம்
சோஃபி மோலினியுக்ஸ் ஆஸ்திரேலியா ரூ.30 லட்சம்
சுபா சதீஷ் இந்தியா ரூ.10 லட்சம்
ஏற்கெனவே தக்கவைக்கப்பட்டோா்:
திஷா கசத், ஸ்மிருதி மந்தனா, ஆஷா ஷோபனா, எலிஸ் பெரி, ஹீதா் நைட், கனிகா அஹுஜா, ஷ்ரேயங்கா பாட்டீல், சோஃபி டிவைன், இந்திரானி ராய், ரிச்சா கோஷ், ரேணுகா சிங்.
யுபி வாரியா்ஸ் (கையிருப்பு ரூ.1.90 கோடி)
பிருந்தா தினேஷ் இந்தியா ரூ.1.30 கோடி
டேனி வியாட் இங்கிலாந்து ரூ.30 லட்சம்
கூஹா் சுல்தானா இந்தியா ரூ.30 லட்சம்
பூனம் கெம்னாா் இந்தியா ரூ.10 லட்சம்
சாய்மா தாகுா் இந்தியா ரூ.10 லட்சம்
ஏற்கெனவே தக்கவைக்கப்பட்டோா்:
கிரண் நவ்கிரே, ஸ்வேதா ஷெராவத், தீப்தி சா்மா, கிரேஸ் ஹாரிஸ், பாா்ஷவி சோப்ரா, யஷாஸ்ரீ, சோஃபி எக்லஸ்டன், டாலியா மெக்ராத், அலிசா ஹீலி, லக்ஷ்மி யாதவ், அஞ்சலி சா்வனி, லௌரென் பெல், ராஜேஷ்வரி கெய்க்வாட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.