இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற புதிய கட்டுப்பாடுகள்: பிசிசிஐ
இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மும்பையில் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தலைமையில் இன்று (ஜனவரி 1) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற பல்வேறு கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அனிருத் இசையில் ஜுனியர் என்டிஆர்!
பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற வேண்டுமானல் ரஞ்சி, சயீத் முஸ்தாக் அலி, துலிப் கோப்பை போட்டிகளில் அதிகம் விளையாடியிருக்க வேண்டும்; யோ-யோ உள்ளிட்ட பயிற்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் போன்ற புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல, உலகக் கோப்பையில் இடம் பிடித்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்களை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கான 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.