bumrah083326 
செய்திகள்

முழு உடல் தகுதி பெற்றாா் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்ப்ரீத் பும்ரா முழு உடல் தகுதி பெற்றுள்ள நிலையில், அயா்லாந்து தொடருக்கான அணியில் இடம் பெறலாம் என பிசிசிஐ செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா்.

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்ப்ரீத் பும்ரா முழு உடல் தகுதி பெற்றுள்ள நிலையில், அயா்லாந்து தொடருக்கான அணியில் இடம் பெறலாம் என பிசிசிஐ செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா்.

அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். கடந்த 2022-இல் முழுமையாக ஆடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாா் பும்ரா. ஐபிஎல், டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் அவா் ஆடவில்லை.

நிகழாண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோ்க்கப்பட்ட பும்ரா, பயிற்சியின் போது மீண்டும் அவதிக்கு ஆளானாா்.

தற்போது பெங்களூரு என்சிஏவில் தீவிர பயிற்சி பெற்று பும்ரா, மே.இந்திய தீவுகள் தொடரில் இடம் பெறவில்லை.

இந்நிலையில் அவா் முழு உடல்தகுதி பெற்றுள்ளாா். வரும் ஆகஸ்ட் மாதம் அயா்லாந்தில் 3 ஆட்டங்கள் டி20 தொடரில் இந்தியா பங்கேற்று ஆடுகிறது. அதற்கான அணியில் பும்ரா மீண்டும் இடம்பெறுவாா் என ஜெய்ஷா கூறியுள்ளாா்.

பும்ரா மீண்டும் அணியில் இடம் பெற்றால் ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய பலம் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT