செய்திகள்

ஹைதராபாத் வெற்றிக்கு தோனி காரணமா?: வைரலாகும் ட்வீட் 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

DIN

ஐபிஎல் போட்டியின் 52-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து வென்றது. 

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. 2,6,2 என  அப்துல் சமத் அடிக்க கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவையிருக்க, சந்தீப் சா்மா பௌலிங்கை அப்துல் சமத் விளாச, அது பட்லா் கைகளில் கேட்ச் ஆனது. ராஜஸ்தான் அணியினா் வெற்றியை கொண்டாடத் தொடங்க, அவா்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. கடைசி பந்தை ‘நோ பால்’-ஆக நடுவா் அறிவித்தாா். மீண்டும் வீசப்பட்ட பந்தில் சமத் சிக்ஸா் விளாசி ஆட்டத்தை முடித்தாா். 

இந்த வெற்றிக்காக சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியின் ட்விட்டர் பக்கத்தில் சமத் (Samad) என்பதற்கு பதிலாக சஎம்எஸ்டி(SaMSD) என பதிவிட்டது. ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் தோனி மட்டுமே அதிக போட்டிகளில் கடைசிப் பந்தில் சிக்ஸர்கள் அடித்து வெற்றியை தந்துள்ளார். அதனால் சமத்தினை தோனியாக பாவித்து ஹைதராபாத் நிர்வாகம் பதிவிட்டது.

கமெண்டில் ரசிகர்கள் தோனியிடம் சமத் பேசும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT