செய்திகள்

சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி சாதனை!

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் 8-வது முறையாக 1000 ரன்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி முறியடித்தார்.

DIN

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் 8-வது முறையாக 1000 ரன்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி முறியடித்தார்.

உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். விராட் கோலி 94 பந்துகளில் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியின்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் அதிகமுறை ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

விராட் கோலி 8-முறை (2011, 2012 , 2013, 2014, 2017, 2018, 2019, 2023) ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 7-முறை (1994, 1996,1997,1998,2000,2003, 2007) ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது. சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட் கோலி இன்று முறியடித்துள்ளார்.

இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த 4-வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலிக்கு முன்னதாக இந்த ஆண்டில் ஷுப்மன் கில், பதும் நிசங்கா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 1000 ரன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெற்குலகின் குரலை உயா்த்துவோம்! பிரதமா் மோடி - தென்னாப்பிரிக்க அதிபா் ராமபோசா உறுதி!

தூக்கு தண்டனை தீா்ப்பு மட்டுமே தீா்வாகுமா என்பதை ஆராய பி.ஆா்.கவாய் வலியுறுத்தல்

ரூ.262 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: என்சிபி, தில்லி காவல்துறை கூட்டு நடவடிக்கை

எம்சிடி இடைத்தோ்தல்: முதல்வா் ரேகா குப்தா உள்பட பாஜக தலைவா்கள் தீவிர பிரசாரம்

மும்பை - நாகா்கோயில் ரயில் ஆம்பூரில் நின்று செல்ல கோரிக்கை

SCROLL FOR NEXT