உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் அபார பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய கிரிக்கெட் வீரருக்கு விருதினை தந்து கௌரவிப்பது ஃபீல்டிங் பயிற்சியாளரின் வழக்கமாக இருக்கிறது. அதன்படி நேற்றையப் போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஃபீல்டருக்கான விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுக்கு ஹூப்மன் கில், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் ரோஹித்தை கட்டித் தழுவி கொண்டனர். இந்த விடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.