கோப்புப் படம் 
செய்திகள்

விசித்திர சாதனை: பந்து வீச்சில் முதலிடம் பிடித்த ரோஹித்! 

பிரபல நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா பந்து வீச்சிலும் அசத்தியுள்ளார். 

DIN

உலகக் கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதியது.

இந்தப் போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி பந்து வீசி ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள். ரோஹித் சர்மா நெதர்லாந்தின் முக்கியமனா பேட்டர் தேஜா நிதமுன்னாரு விக்கெட்டினை எடுத்து அசத்தினார். 

இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறந்த சராசரி கொண்ட பௌலர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். 5 பந்துகள் மட்டுமே வீசி 1 விக்கெட் எடுத்து 7 ரன்கள் வழங்கினார். இதன் மூலம் சராசரி 7 உடன் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ஷமி 2வது இடத்தில் உள்ளார். 

இந்தப் பட்டியலில் உள்ள வீரர்கள்: 

ரோஹித் சர்மா -7.00 

மொகமது ஷமி - 9.56

விராட் கோலி - 15.00

பும்ரா - 15.64

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT