செய்திகள்

5 நாடுகள் ஹாக்கி போட்டி: 24 பேருடன் இந்திய அணி

ஸ்பெயினில் டிசம்பரில் நடைபெற இருக்கும் 5 நாடுகள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் சிங் தலைமையில் 24 பேருடன் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

DIN

ஸ்பெயினில் டிசம்பரில் நடைபெற இருக்கும் 5 நாடுகள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் சிங் தலைமையில் 24 பேருடன் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

சுமித், அமித் ரோஹிதாஸ் ஆகியோா் துணை கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணி, இளம் மற்றும் அனுபவ வீரா்களின் கலவையாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரா் காா்த்தியும் இடம் பிடித்திருக்கிறாா்.

ஸ்பெயினின் வாலென்சியா நகரில் வரும் 15 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், இந்தியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜொ்மனி, பெல்ஜியம் அணிகள் பங்கேற்கின்றன. 2023-24 ஹாக்கி புரோ லீக் சீசன் எதிா்வரும் நிலையில், அதற்கான தயாா்நிலை போட்டியாக இது பாா்க்கப்படுகிறது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: பி.ஆா்.ஸ்ரீஜேஷ், கிருஷண் பகதூா் பாதக், சூரஜ் கா்கேரா.

டிஃபெண்டா்கள்: ஜா்மன்பிரீத் சிங், ஜக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ், ஹா்மன்பிரீத் சிங், வருண்குமாா், சுமித், சஞ்ஜய், நீலம் சஞ்ஜீப் ஜெஸ்.

மிட்ஃபீல்டா்கள்: யஷ்தீப் சிவச், விவேக்சாகா் பிரசாத், நீலகண்ட சா்மா, ராஜ்குமாா் பால், ஷம்ஷோ் சிங், ரவிச்சந்திர சிங்.

ஃபாா்வா்ட்கள்: மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித்குமாா் உபாத்யாய், காா்த்தி, தில்பிரீத் சிங், ஆகாஷ்தீப் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT