செய்திகள்

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்: இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லுமா?

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டியில்  இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. 

DIN

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. 

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் அரையிறுதிப் போட்டிகள் இன்று (அக்டோபர் 6) நடைபெற்றன. முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல இன்று (அக்டோபர் 6) நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அரையிறுதிப் போட்டியில் வென்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நாளை (அக்டோபர் 7) நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT