செய்திகள்

மெட்ரோ ரயிலில் கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட பயணிக்கு ரூ.500 அபராதம் விதிப்பு

DIN

பெங்களூரு மெட்ரோ ரயிலில் விதிமீறி கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட பயணிக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரு மெட்ரோவில் ஜெயாநகர் மற்றும் சம்பிகே சாலை நிலையங்களுக்கு இடையே குமார் என்கிற பயணி ஒருவர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அவர் கோபி மஞ்சூரியன் சாப்பிட்டவாறே சென்றார். இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. 
மேலும் விதிமுறைகளை மீறி கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட குமாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும் தெரிவித்தனர். மெட்ரோவில் பயணிக்கும் போது உணவருந்தக்கூடாது என்ற விதி அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் விதிமீறி மெட்ரோ ரயிலில் கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட பயணி குமார் மீது வழக்குப்பதிவு செய்ததோடு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 
ஜெயநகர் காவல் நிலையத்தில் பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறை விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகவும் நம்ம மெட்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடமாட்டேன் என்று அப்போது அந்த பயணி உறுதியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT