செய்திகள்

தவறான ஜெர்சியை அணிந்து ஃபீல்டிங் செய்த விராட் கோலி!

உலகக் கோப்பைக்கான ஜெர்சிக்குப் பதில் தவறான ஜெர்சியை அணிந்து விளையாடிய விராட் கோலி பின்னர் போட்டிக்கான ஜெர்சியை அணிந்து விளையாடினார்.

DIN

உலகக் கோப்பைக்கான ஜெர்சிக்குப் பதில் தவறான ஜெர்சியை அணிந்து விளையாடிய விராட் கோலி பின்னர் போட்டிக்கான ஜெர்சியை அணிந்து விளையாடினார்.

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்க பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. இந்திய அணி  7-வது ஓவரை வீசியபோது உலகக் கோப்பை தொடருக்கான புதிய இந்திய ஜெர்சியை அணியாமல் தவறுதலாக வேறு ஜெர்சி அணிந்திருப்பதை உணர்ந்த விராட் கோலி, உடை மாற்றும் அறைக்கு சென்று சரியான ஜெர்சியை அணிந்து வந்தார்.

7-வது ஓவரில் உடைமாற்றும் அறைக்கு சென்று சரியான ஜெர்சியை அணிந்த அவர் அடுத்த ஓவருக்குள் மீண்டும் ஃபீல்டிங்குக்கு வந்தார். அந்த ஓவரில் முகமது சிராஜ் பாகிஸ்தான் வீரர் அப்துல்லா சஃபீக்கின் விக்கெட்டினை வீழ்த்தினார்.

சாதாரண இந்திய ஜெர்சியில் வீரர்களின் தோளில் மூன்று வெள்ளைப் பட்டைகள் இருக்கும்.  உலகக் கோப்பைக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜெர்சியில் வீரர்களின் தோள்பட்டையில் தேசியக் கொடியின் மூவர்ணப் பட்டை இடம்பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பி.ஆா்க். சோ்க்கை கலந்தாய்வு இன்று நிறைவு

துா்க்கையம்மன் கோயில் ஆடித்திருவிழா

மின்சாரம் பாய்ந்து மக்கள் நலப் பணியாளா் உயிரிழப்பு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

மேம்பால கட்டுமானப் பணி மத்திய கைலாஷ் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT