செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஆதிக்கம்: பாகிஸ்தானின் ஆதிக்கம் எந்த அணியின் மீது தெரியுமா?

DIN

உலகக் கோப்பை வரலாற்றில்  8-வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி பாகிஸ்தான் மீதான தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து  வருகிறது.

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நேற்று (அக்டோபர் 14) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் தனது சாதனையை இந்தியா தொடர்கிறது. இதுவரை ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 8  முறை மோதியுள்ளன. இந்த 8 போட்டிகளிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. 

உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானின் மீது ஆதிக்கம் செலுத்துவது போல பாகிஸ்தான் அணி இலங்கை மீது தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. உலகக் கோப்பையில் இதுவரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 9  போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 8 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இதன்மூலம் உலகக் கோப்பையில் இலங்கை மீது தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது பாகிஸ்தான்.

அதேபோல உலகக் கோப்பையில்  ஜிம்பாப்வே மீது மேற்கிந்தியத் தீவுகள் அணியும், வங்கதேசத்தின் மீது நியூசிலாந்து அணியும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. இதுவரை உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 6 முறையுமே மேற்கிந்தியத் தீவுகளே வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் 6 முறை நியூசிலாந்து - வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளதில், 6 முறையுமே நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: காரைக்குடி பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி முகாம்

இன்றைய நிகழ்ச்சிகள் - மதுரை

பட்டாசு ஆலை விதிகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT