அவனி லேகாரா 
செய்திகள்

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் அவனி!

பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகாரா தங்கப் பதக்கம் வென்றார். 

DIN

பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகாரா தங்கப் பதக்கம் வென்றார். 

சீனாவில் அக்.22ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து 303 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இரண்டாவது நாளான இன்று (அக். 23) துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லேகாரா பங்கேற்றார். இவர் 249.6 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றதோடு, பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் ருத்ரனேஷ் கந்தேல்வால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதேபோன்று உயரம் தாண்டுதல் பிரிவில் 1.82 மீட்டர் தூரம் தாண்டி இந்தியாவின் ஷைலேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். நீளம் தாண்டுதல் போட்டியில் நிஷாத் 2.02 மீட்டர் தூரத்திற்கு நீளம் தாண்டி தங்கம் வென்றார். 

ஆண்களுக்கான 5000 மீட்டர்-டி11 பிரிவில் அங்கூர் தாமா இந்தியாவுக்கு ஐந்தாவது தங்கப் பதக்கத்தை வென்றார். தற்போதுவரை இந்தியா, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT