ஜீவன்ஜி தீப்தி 
செய்திகள்

ஆசிய பாரா ஒலிம்பிக்: தடகளத்தில் தங்கம் வென்றார் தீப்தி!

பெண்களுக்கான (டி-12 பிரிவு) 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சிம்ரன் சர்மா வெள்ளிப்பதக்கம் வென்றார். 

DIN


ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜீவன்ஜி தீப்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

சீனாவில் அக்.22ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து 17 விளையாட்டுப் பிரிவுகளில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என 303பேர்  பங்கேற்றுள்ளனர். 

இதில், இன்று நடைபெற்ற (டி-20 பிரிவு) 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜீவன்ஜி தீப்தி கலந்துகொண்டார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 56.69 நொடிகளில் கடந்து தீப்தி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். ஆசிய அளவில் இது சாதனையாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், பெண்களுக்கான (டி-12 பிரிவு) 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சிம்ரன் சர்மா வெள்ளிப்பதக்கம் வென்றார். 

ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என 24 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்!

SCROLL FOR NEXT